இங்க்லீஸ் படத்தில் நடிக்கச் செல்லும் மதுரைக்கார பொண்ணு!

நடிகை நிவேதா பெத்துராஜ் ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் காலம் நெருங்கிவிட்டது.


ஒரு நாள் கூத்து என்ற படத்தில் அட்டகத்தி தினேஷ் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் பின்னர் ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் விஜய் ஆண்டனி உடன் திமிரு புடிச்சவன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்தப் படத்தில் நிவேதா போலீசாக நடித்து இருந்தாலும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்கவில்லை. அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் விஜய் சந்தர் இணையும் புதிய படம் ஒன்றில் நிவேதா நடிக்கிறார். ஆனால் அவரது கனவு ஹாலிவுட்டில் நடிப்பது ஆகும். தற்போது அவரது கனவு நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

ஹாலிவுட்டின் பிரபல நிறுவனமான மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் தயாரிக்கும் படத்திற்கான ஒத்திகையில் கடைசி கட்ட தேர்வை நிவேதா பெத்துராஜ் அடைந்துள்ளார். எப்படியேனும் இதில் வாய்ப்பு கிடைத்து விடும் என்று அந்த நடிகை பெரும் நம்பிக்கையுடன் உள்ளார்.

கார்டியன் ஆப் த கேலக்ஸி 3…பிளாக் விடோ, பிளாக் பாந்தர் 2 ஆகிய திரைப்படங்கள் மார்வல் வசம் உள்ளன. இவற்றில் எந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.