போட்டோவை பார்த்துவிட்டு ஹோட்டல் அறைக்கு அழைத்தார்..! சென்றேன்..! என் தோள் மீது கைவைத்தார்..! முதல் பட அனுபவத்தை கூறிய நடிகை!

பிரபல நடிகை நவ்யா நாயர் திரைக்கு அறிமுகமாகிய தனது முதல் பட அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார்.


சில வருடங்களுக்கு முன்பு தமிழ் ,மலையாளம், கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை நவ்யாநாயர் ஆவார். இவர் இஷ்டம் என்ற தனது முதல் திரைப்படத்தில் நடிகர் திலீப்புடன் ஹீரோயினாக அறிமுகமானார். ஏராளமான மலையாள திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நவ்யா நாயர் தனது திறமையான நடிப்பின் மூலம் பல்வேறு விருதுகளையும் வாங்கி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அழகிய தீயே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மாயக்கண்ணாடி, பாசக்கிளிகள் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நவ்யா நாயர் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் நடிகை நவ்யா நாயர் தற்போது மலையாளத்தில் ஒருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் படம் அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார். 

இஷ்டம் என்ற திரைப்படத்திற்காக இயக்குநர் சிபி எனது போட்டோவை பார்த்து ஒரு ஓட்டலுக்கு வரும்படி என்னை அழைத்தார். நானும் அங்கு சென்றிருந்த போது என் நடிப்புத் திறமையை அவர் சோதித்துப் பார்த்து அதை வீடியோவாக பதிவு செய்தார். பின்னர் அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் திலீப் அந்த வீடியோவை பார்த்த பிறகு என்னை கதாநாயகியாக்க அவர் ஒப்புக்கொண்டார். அப்போது நடிகர் திலீப் என் தோளில் கை வைத்தபடி போஸ் கொடுத்தார். உடனே எனக்கு இதயத்துடிப்பு அதிகமாகி படபடப்பு ஏற்பட்டது. கிராமத்தில் பிறந்து வளர்ந்த என் மீது அறிமுகமில்லாத ஒருவர் கை வைக்கும்போது மிகவும் சங்கடத்துக்கு உள்ளானேன். அப்போது மட்டும் அவர் என்னுடைய நடிப்பு வீடியோவை பார்த்து வேண்டாம் என்று சொல்லியிருந்தால் நான் சினிமாவுக்கே வந்து இருக்க முடியாது.இவ்வாறு தனது முதல் பட அனுபவம் பற்றி நடிகை நவ்யாநாயர் மணம் திறந்தார்.