உடல்ரீதியாக டார்ச்சர்..! 2 கணவன்களையும் விவாகரத்து செய்தது ஏன்? தமிழ் நடிகை பகீர் தகவல்!

பிரபல நடிகையான மீரா வாசுதேவன் இரண்டு கணவர்களும் தன்னை உடல் ரீதியாக டார்ச்சர் செய்ததால் தான், அவர்களை விவாகரத்து செய்ததாக பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார்.


அடங்கமறு , கத்திகப்பல் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மீரா வாசுதேவன். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நட்சத்திரமாக வலம் வருகிறார். மலையாளத்தில் பிரபல நடிகரான மோகன்லாலுடன் இணைந்து தன்மந்திரா திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

பின்னர் கடந்த 2005ஆம் ஆண்டு சினிமாவில் ஒளிப்பதிவாளராக வலம்வரும் ஒருவரின் மகனை திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

இதனை அடுத்து நடிகை மீரா பிரபல மலையாள நடிகரான ஜான் கொக்கனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக மீராவிற்கு , தன்னுடைய இரண்டாவது திருமணமும் நிலைத்து நிற்கவில்லை. 

மீண்டும் தனது இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீரா விவாகரத்து பெற்றுக் கொண்டார் . தற்போது அவருடைய குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததைப் பற்றி மனம் திறந்து கூறியிருக்கிறார். அதாவது மீரா திருமணம் முறிவு என்றால் இந்த சமூகம் பெண்களை தான் குறை கூறுகிறது. 

நான் வாழ்க்கையில் சந்தித்த தொல்லைகள் மிக அதிகம். திருமணம் செய்து கொண்ட முதல் கணவரிடம் நான் பட்ட கொடுமைகள் மிக அதிகம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல வேதனைகளை நான் அவரிடம் அனுபவித்தேன். உங்களை என்னால் வார்த்தையால் விளக்க இயலாது.

அதனைத் தாண்டி இரண்டாவது திருமணமும் செய்து கொண்டேன் . ஆனால் அந்த திருமணமும் எனக்கு நிலைத்து நிற்கவில்லை. மனரீதியாக எனக்கும் அவருக்கும் ஒத்துப் போகாததால் மீண்டும் அவரை நான் விவாகரத்து செய்து விட்டேன் எனக் கூறியிருக்கிறார்.