தெறி பேபி நைனிகா நியாபகம் இருக்கா? 4 வருடங்களில் எப்படி மாறிவிட்டார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான தெறி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நைனிகா நடித்திருந்தார்.


நடிகை மீனாவின் மகளான நைனிகா தெறி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நைனிகா தனது குறும்புத்தனமான நடிப்பின் மூலம் பல்வேறு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். தெறி படத்தின் வெற்றியில் மீனாவின் மகள் நைனிகாவுக்கும் ஒரு முக்கிய பங்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தெறி படத்துக்குப் பிறகு தமிழில் நைனிகா எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இவர் தற்போது அவருடைய அம்மா மீனா மற்றும் நடிகை சங்கவி உடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்துள்ளார்.

நைனிகாவின் இந்த புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது