17 வயசுலயே ஸ்டார்ட் பண்ணிட்டேன்..! புகைப்படத்தை வெளியிட்டு உண்மையை கூறிய சொப்பன சுந்தரி!

பிரபல நடிகை மனிஷா யாதவ் 17 வயதில் முதல் முறையாக நடந்த போட்டோ ஷூட்டில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் நடிகை மனிஷா யாதவ் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் நடிகை மனிஷா யாதவ் பிரபலமான நடிகையானார். அதன் பிறகு இவர் ஆதலால் காதல் செய்வீர் ,ஜன்னலோரம் ,பட்டைய கிளப்பணும் பாண்டியா ,திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்த திரைப் படங்கள் யாவும் அவருக்கு பெரிதும் கை கொடுக்காததால் நடிகை மனிஷா யாதவுக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

அதன் பின்னர் இவர் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகியது. எனினும் இவருக்கு படவாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தினால் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஒரு குப்பை கதை என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான சண்டி முனி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை மனிஷா யாதவ் தனது 17 வயதில் முதல் முறையாக நடந்த போட்டோ ஷூட்டில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது 27 வயதாகும் நடிகை மனிஷா யாதவ் தனது 17 வயதில் நடந்த போட்டோ ஷூட்டில்  எடுக்கப்பட்ட புகைப்படங்கள்  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.