அந்த இடத்தில் இவ்ளோ பெருசா..? XXL சைசில் பிரபல மலையாள நடிகை வெளியிட்ட புகைப்படம் உள்ளே! என்ன தெரியுமா?

பிரபல நடிகை லக்ஷ்மி மேனன் தனது முதுகில் டாட்டூ குத்தி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ், மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை லட்சுமி மேனன். இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் கும்கி ,பாண்டியநாடு ,குட்டிப்புலி ,கொம்பன் ,மிருதன் ,நான் சிகப்பு மனிதன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். 

இவர் தமிழில் கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ரெக்க என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்பு குறைந்ததால் நடிகை லட்சுமிமேனன் தனது கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார். படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் இவர் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. நடிகை லட்சுமி மேனன் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க இருக்கும் சிப்பாய் என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை லட்சுமிமேனன் தனது முதுகில் புதிதாக பெரிய சைஸில் டாட்டூ ஒன்றைப் போட்டுக் கொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம்  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.