சேது..! என்ன நீ தான் அழகாக்கனும்..! இளம் நடிகரிடம் சென்று சரண்டரான 49 வயசு குஷ்பு!

நடிகை குஷ்பு முக அழகை திருத்திக் கொள்வதற்காக கதாநாயகனின் மருத்துவமனைக்கு சென்றிருப்பது கோலிவுட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


"கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சேது. அதன்பிறகு "வாலிப ராஜா" என்னும் படத்திலும் கதாநாயகனாக வலம் வந்தார். சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு சொந்தமாக "ஜீ-கிளினிக்" என்ற மருத்துவமனை அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனையில் பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகள் தங்களுடைய முக அழகை மேம்படுத்தி கொள்வதற்காக வந்துள்ளனர். ஒரு திரைப்பட விழாவில் கூட, பாபி சிம்ஹா மற்றும் வெங்கட் பிரபு சேதுவின் மருத்துவமனைக்கு சென்று முக அழகை மேம்படுத்தி கொண்டதாக கூறியுள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து பிரபல கோலிவுட் நட்சத்திரமான நடிகை குஷ்பு சேதுவின் மருத்துவமனைக்கு சென்று முக அழகை மேம்படுத்தி கொண்டுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இறுதியாக குஷ்பு அரண்மனை 2 படத்தில் ஒரு பாடலில் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியானது தற்போது கோலிவுட் திரையுலகில் வைரலாகி வருகிறது.