குஷ்புவை அலேக்காக தூக்கி வைத்திருக்கும் 3 ஆண்கள்..! அவரே வெளியிட்ட புகைப்படம் உள்ளே! யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை குஷ்பு , மூன்று ஆண்கள் ஒன்றாக இணைந்து அவரை அலேக்காக தூக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.


ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகைகளின் பட்டியலில் முன்னிலை வகித்தவர் நடிகை குஷ்பு. இவர் தன்னுடைய அழகிய தோற்றத்தாலும் அசாதாரணமான நடிப்பாலும் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்து இழுத்தார். பட்டி தொட்டியெங்கும் இவரது புகழ் பரவ ஆரம்பித்தது.

இதனை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் ஒரு சிலர் இணைந்து கோவிலும் கட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை குஷ்பூ, ரஜினி, கமல், சரத்குமார், போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் இவர் இயக்குனர் சுந்தர்.சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். வயதானாலும் நடிகை குஷ்பூ, சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான லட்சுமிஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இந்நிலையில் நடிகை குஷ்பு தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் மூலிகை கிடைக்கும் நிலையில் தன்னுடைய பழைய புகைப்படங்களை தன் ரசிகர்களுடன் பகிர்ந்ததுடன் அழகிய நினைவுகளையும் பகிர்ந்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் 3 ஆண்கள் அலேக்காக நடிகை குஷ்புவை தூக்கி பிடித்துள்ளனர். இதனை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு "லாங் லாங் மெமரி" என்று கேப்ஷன் வெளியிட்டிருக்கிறார். நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.