அபிநந்தன் பிராமணரா? சாதி ஆராய்ச்சியில் இறங்கிய கஸ்தூரி!

பாகிஸ்தான் பிடியிலிருக்கும் விங் கமாண்டர் அபிநந்தன் நல்லபடியாகத் திரும்பிவரவேண்டும் என்று அத்தனை இந்தியர்களும் பிரார்த்தனை செய்யும்போது, அவர் பிராமணர் என்று கஸ்தூரி போட்ட வெடிகுண்டால் சோஷியல் மீடியா நாறுகிறது.


அபிநந்தன் சென்னையின் மகன். திர்பணமூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஆச்சாரமான குடும்பத்தில் தந்தையும் பிரம் விஷிஸ்ட் சேவா மெடல் வாங்கிய விமானப்படை வீரர் என்று ஆச்சாரத்தை கஸ்தூரி குறிப்பிட்டு ட்வீட் செய்ததும் சமூக வலைதளம் அதகளத்தை தொடங்கியது.

சீருடையில் எதற்காக ஆச்சாரம் பார்க்கிறீர்கள் என்று கேள்விகேட்டதும் பொங்கினார் கஸ்தூரி. ராணுவத்தில் ரத்தம் சிந்தியவன் யாரும் பிராமணன் இல்லை என்று கணக்கெடுக்கும் நன்றிகெட்ட திராவிட சொம்புகளுக்கு என் பதிவு கசக்கத்தான் செய்யும் என்று மீண்டும் ஒரு பதிவு போட்டார் கஸ்தூரி.

உடனே சமூக வலைதளத்தில் கஸ்தூரிக்கு ஆதரவாக ஒரு குரூப்பும், எதிர்ப்பாக ஒரு குரூப்பும் முட்டி மோதிவருகிறார்கள். அபிநந்தன் என்ன சாதி என்று தெரியாமல் ஆளாளுக்கு பேசுவதாகவும், ஹெச்.ராஜாவை தீக்குளிக்கச் சொல்லியும் பதிவு போட்டு கலாய்த்துவருகிறார்கள்.

உண்மையில் அபிநந்தன் தமிழர் கிடையாது. பிறப்பால் மலையாளி. நாயர் இனத்தைச் சேர்ந்தவர். 

அதனால் சாதியைப் பார்க்காதீங்க, அவர் நல்லபடியா திரும்பிவர மட்டும் பிரார்த்தனை செய்யுங்க என்று கஸ்தூரியை பலரும் திட்டித் தீர்க்கிறார்கள். முஸ்லீம் குடுக்கும் டீயை பிராமணன் சாப்பிடலாமா என்று அபிநந்தனுக்கும் திட்டு விழுகிறது.

எல்லையில் உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக வீரர்கள் போரிடும் வேளையிலும், ஜாதி பஞ்சாயத்தை இழுத்து அவமானப்படுத்தும் கஸ்தூரி போன்றவர்களை என்னதான் செய்வது?