என்னதான் மகனா இருந்தாலும்? இப்படி தொடை தெரியவா! அஜித் பட நடிகையின் செயலால் தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்! வீடியோ உள்ளே!

பிரபல திரைப்பட நடிகை கனிகா தன் மகனுடன் இணைந்து நடனமாடிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .


தமிழ்சினிமாவில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கனிகா. இதனைத் தொடர்ந்து இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதிலும் குறிப்பாக தல அஜித்துடன் இணைந்து வரலாறு திரைப்படத்தில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப், எதிரி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார் நடிகை கனிகா.

பின்னர் நடிகை கனிகாவிற்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் திரை உலகை விட்டு விலகி இருந்தார். இதனையடுத்து நடிகை கனிகா அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நடிகை கனிகாவும் தன்னுடைய குடும்பத்தினருடன் தன் வீட்டில் இருந்து வருகிறார் . தற்போது இவர் தன் மகனுடன் இணைந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது நடிகை கனிகா அந்த வீடியோ பதிவில் முதலில் முட்டிக்கு மேலே வரை மட்டுமே இருக்கும் பச்சை நிற டாப் அணிந்து கொண்டு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். நடிகை கனிகா நடனம் ஆடும் பொழுது அவரது மகன் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு ஒரு ஓரமாக நின்று தன் அம்மாவின் நடனத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறான். நடிகை கனிகா நடனமாடி முடித்த பின்பு அவரது மகன், தன் அம்மா அணிந்து கொண்டிருந்த டாப்பை அணிந்துகொண்டு நடனம் ஆடினார்.அப்போது நடிகை கனிகா வேஷ்டி சட்டையை அணிந்து தன் மகன் நடனம் ஆடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இது பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாக காணப்பட்டது.

இந்த வீடியோ பதிவை நடிகை கனிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மகனின் முன்பு இப்படியா தொடை தெரிய ஆடுவது என நடிகை கனிகாவை கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.