தலைமுடியை மழித்து மொட்டை அடித்துக் கொண்ட சீரியல் நடிகை! நெகிழ வைத்த காரணம்!

பிரபல நடிகையான ஜெயா பட்டாச்சார்யா தனது தலையை மொட்டையடித்து, அதனை புகைப்படமாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரிய படுத்தியுள்ளார்.


க்யுங்கி சாஸ் பீ கபி பாஹு தி புகழ் ஜெயா பட்டாச்சார்யா தலையை மொட்டையடித்து ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.  மொட்டை அடித்தவுடன் எடுத்த புகைப்படங்களை நடிகை ஜெயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வெப்ப நிலையில் தன்னுடைய கூந்தலை பராமரிக்க முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக நடிகை ஜெயா பட்டாச்சாரியார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 மேலும் அந்த பதிவிற்கு கேப்ஷனாக, ஆச்சரியம் இதை பல வயதிலிருந்தே செய்ய விரும்பியது.. ஆனால் ஒருபோதும் போதுமான உந்துதல் இல்லை. இது எனக்கு மிகவும் சுதந்திரமாகவும் சிறப்பாகவும் செயல்பட உதவுகிறது. ஒரு நடிகையாக தனது அழகைத் தக்க வைத்துக் கொள்ளும்படி தனது குழந்தைகள் அடிக்கடி சொல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதிலும் குறிப்பாக மகன் அங்கித், தலைமுடியை வெட்டினால் அவருடன் பேசுவதை நிறுத்தி விடுவார் என நடிகை ஜெயா பட்டாச்சாரியார் கூறியிருக்கிறார். எனது ஓட்டுநருக்கும் இன்னும் பலருக்கும் உணவு வழங்க நான் வெளியே செல்ல வேண்டும். ஏசியிலேயே ஒரு போதும் என் காலத்தை நான் கடக்க இயலாது. என் அழகை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் நான் செய்ய ஆரம்பித்தால் நான் அதிகம் பாதிக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் புற்றுநோயாளிகளுக்கு தன்னுடைய நன்கொடையாக வழங்க வேண்டும் என்பதற்காக அதனை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் நடிகை ஜெயா பட்டாச்சாரியார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.