என் அப்பா, என் அம்மாவுக்கு லிப் கிஸ் அடிக்கும் போது..! பிரபல நடிகை வெளியிட்ட அந்தரங்க புகைப்படம்..! யார் தெரியுமா?

நடிகை இஷா குப்தா தன்னுடைய அம்மாவும் அப்பாவும் லிப் லாக் அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.


கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நடிகர் நடிகைகள் தங்களது வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே நடிகைகள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் த்ரோ பேக் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை இஷா குப்தா ராஸ் 3, ரஷ்டம், டோட்டல் தமால் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை இஷா குப்தா எப்போதுமே கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். லாக்டவுன் நேரத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த நடிகை இஷா குப்தா அவ்வப்போது யோகா செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை இஷா குப்தா, தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் த்ரோபேக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள அந்த புகைப்படங்களில், ஜோடி ஒன்று அட்டகாசமாக லிப் லாக் செய்யும் காட்சிகள் இருந்துள்ளன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் யார் இவர்கள் என்று குழம்பி இருந்தனர். இந்நிலையில் அந்த புகைப்படத்தில் லிப் லாக் செய்யும் ஜோடிதான் தன்னுடைய அம்மா அப்பா என்று நடிகை இஷா குப்தா ஆச்சரியப்படும் தகவலை வெளியிட்டிருக்கிறார். ஆபாசமான கமெண்ட்டுகள் ஏதும் வரக்கூடாது என்பதற்காக நடிகை இஷா முன்கூட்டியே கமெண்ட் ஆப்ஷனை ரத்து செய்திருக்கிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.