பிரைவசியே இல்லை! போதையில் சிக்கிய தமிழ் நடிகை ஆதங்கம்!

போதை நடிகை விளக்கம்

போதையில் கார் ஓட்டியதாக  சிக்கிய நடிகை காயத்ரி ரகுராம் தன்னைப் பற்றி  நிருபர் ஒருவர் பொய் செய்தி கொடுத்திருப்பதாகவும் அந்த நிருபர்தான் போதையில் இருந்ததாகவும் ட்விட்டரில் விளக்கியுள்ளார்

நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

எதையோ மறைக்க நான் செய்தியாக்கப்பட்டுள்ளேன். பேனாவும் பத்திரிகையும் பலமானதாக இருக்கலாம். ஆனால், எனது ஆன்மாவைவிட வாழ்க்கையைவிட எதுவும் வலுவானது இல்லை. என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். நான் துணிச்சலுடன் வாழ்வேன். இந்த பொய் செய்தியை உருவாக்கிய நிருபர்தான் போதையில் இருந்தார். 

நான் எனது படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் எனது சக நடிகரை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கமான வாகன சோதனைக்காக என்னை நிறுத்தினார்கள். அங்கே வாக்குவாதமோ தர்க்கமோ எதுவும் நடக்கவில்லை. அந்த நிருபர் அவர் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதியிருக்கிறார்.

எனது லைசன்ஸ் மற்ற ஆவணங்கள் வேறொரு பையில் இருந்ததால் அவற்றை அப்போது போலீஸாரிடம் காண்பிக்க முடியவில்லை. அவர்கள் பணியை நான் பாராட்டினேன். அங்கே எனது ரசிகர் ஒருவர் என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். நானேதான் எனது காரை ஓட்டிச் சென்றேன். ஒருவேளை நான் போதையில் இருந்திருந்தால் என்னை எப்படி காரை ஓட்டிச் செல்ல அனுமதித்திருப்பார்கள். 10 நிமிடங்கள்தான் நான் அங்கிருந்திருப்பேன்.

என்னைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் எனக்கு கவலை இல்லை. போதையில் இருந்த அந்த நிருபரை விட்டுவிட்டு எல்லோரும் என்னை குறிவைக்கின்றனர். தனிப்பட்ட சுதந்திரம் (பிரைவசி)

என்பதே இங்கில்லை. இருந்தாலும் வேறு முக்கியமான விஷயங்கள் இருப்பதால் அதை கவனிக்கிறேன். கடவுள் அருளட்டும்.

இவ்வாறு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.