நான் பீரியட்சில் இருக்கும் போது 10 முதல் 12 பேட்கள் பயன்படுத்துவேன்..! வெளிப்படையாக கூறிய நடிகை! ஏன் தெரியுமா?

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான திவ்யா அகர்வால் தன்னுடைய மாதவிடாய் காலங்களில் காதலனுக்கு தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாது என அவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.


பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வருபவர் திவ்யா அகர்வால். திவ்யா அகர்வால் மற்றும் வருண் சூத் ஆகியோர் ஏஸ் ஆஃப் ஸ்பேஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றது முதல் நெருங்கிப் பழகி வருகின்றனர். இருவருக்குமிடையில் காதல் ஏற்பட்டு தற்போது, ​​இருவரும் ஊரடங்கின் போது ஒன்றாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். நடிகை திவ்யா அகர்வால் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். பொதுவாகவே தன்னுடைய காதலனுடன் நேரத்தை செலவிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இருப்பார்.

அந்த வகையில் நடிகை திவ்யா சமீபத்தில் ஒரு இடுகையைப் பகிர்ந்து கொண்டார். தன்னுடைய மாதவிடாய் காலங்களில் தனது காதலன் தன்னை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார் என்பதை வெளிப்படுத்தினார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வீடியோவைப் கொண்டார். மேலும் அந்த பதிவிற்கு கேப்ஷனாக, என்னுடைய மாதவிடாய் காலங்களில் எனது காதலனுக்கு எப்படி என்னிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை என்று பதிவிட்டிருக்கிறார். நடிகை திவ்யா அகர்வால் பதிவிட்ட இந்த மாதவிடாய் கால பதிவு சமூக வலைத்தளத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் நடிகை திவ்யா அகர்வாலை கண்டபடி திட்டி தீர்க்க ஆரம்பித்துவிட்டனர். அதில் ஒருவர், உங்களுடைய தனிப்பட்ட ஒன்றை இப்படி வெளிப்படையாக கூறுகிறீர்களே.. என்று கமெண்ட் செய்தார். 

நடிகை திவ்யா அகர்வால் , அந்த நெட்டிசன் பதிவிட்ட கமெண்ட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதில், நான் பீரியட்ஸில் இருக்கும்பொழுது 10 முதல் 12 பேட்கள் வரை நான் பயன்படுத்துவேன்.. என்று வெளிப்படையாக கூறியிருந்தார். நடிகை திவ்யா அகர்வால் பதிவிட்ட இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது.