கொரோனா ஊரடங்கு..! தோளுக்கு மேல் வளர்ந்த மகள்களுடன் தேவயானி எடுத்த துணிச்சல் முடிவு..! என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தேவயானி தன்னுடைய இரண்டு மகள்களுடன் இணைந்து சிலம்பம் கற்றுக் கொள்ளும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் சூரியவம்சம், விண்ணுக்கும் மண்ணுக்கும் என பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். இதனை அடுத்து தமிழ் திரைப்பட இயக்குனரான ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இனியா , பிரியங்கா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தன் தந்தையின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். 

அந்தியூர் அருகே உள்ள ஆலயம் கரடு பகுதியில் இயக்குனர் ராஜகுமாரனுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது.

நடிகை தேவயானி சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மதித்து அவர்கள் தன்னுடைய கணவரின் சொந்த ஊரில் உள்ள வீட்டில் தன் மகள்களுடன் இருந்து வருகிறார். மேலும் தன்னுடைய பொழுதை அங்கு என்னுடைய இரண்டு மகள்களுடன் இணைந்து சிலம்பம் கற்றுக் கொண்டு சிறப்பாக கழித்து வருகிறார்.

தேவயானி தன் மகள் களுடன் இணைந்து சிலம்பம் கற்றுக் கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.