கையடக்க பலா..! கைக்கெட்டும் இளநீர்..! இயற்கை விவசாயத்தில் தேவயானி..! ஈரோட்டில் குடியேறிய குடும்பம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தேவயானி தன்னுடைய குடும்பத்தினருடன் தன்னுடைய கணவரின் சொந்த ஊரில் ஊரடங்கு நாட்களை இயற்கை விவசாயம் செய்வதற்கு பயன்படுத்தி வருகிறார் என்பது அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் சூரியவம்சம், விண்ணுக்கும் மண்ணுக்கும் என பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். இதனை அடுத்து தமிழ் திரைப்பட இயக்குனரான ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இனியா , பிரியங்கா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தன் தந்தையின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். 

அந்தியூர் அருகே உள்ள ஆலயம் கரடு பகுதியில் இயக்குனர் ராஜகுமாரனுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது.  நடிகை தேவயானி சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மதித்து அவர்கள் தன்னுடைய கணவரின் சொந்த ஊரில் உள்ள வீட்டில் தன் மகள்களுடன் இருந்து வருகிறார். மேலும் தன்னுடைய பொழுதை அங்கு தன்னுடைய கணவர் மட்டும் இரண்டு மகள்களுடன் இயற்கையான முறையில் விவசாயம் செய்து கழித்து வருகிறார். இயற்கை விவசாயம் செய்வது பற்றி நடிகை தேவயானி டம் கேட்டபோது, அவர் லாப நோக்கத்திற்காக இதில் ஈடுபடவில்லை என்றும் மனத்திருப்திக்காக மட்டுமே இதனை செய்வதாகவும் கூறினார்.

மேலும் தனக்கு விவசாயத்தில் பெரிதாக அனுபவம் இல்லாததால் தன்னால் முடிந்தவரை தனது கணவருக்கு உதவி செய்து வருவதாகவும் கூறி இருக்கிறார். இவர்களின் தோட்டத்தில் கைக்கு எட்டும் உயரத்தில் இளநீரும் கையடக்க பலா பழங்களும் காண்போரின் கண்களை பறிக்கும் விதமாக அமைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடிகை தேவயானி மற்றும் அவரது குடும்பம் முழுவதும் ஊரடங்கு நாட்களை இயற்கை விவசாயத்தில் செலவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் நடிகை தேவயானி மற்றும் அவர்களது இரண்டு மகள்களும் இணைந்து சிலம்பம் கற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.