அந்த விஷயத்துக்காகத்தான் டூ பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்டேனா? உண்மையை சொன்ன தமிழ் நடிகை!

பிரபல நடிகை தீப்தி சதி தான் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை ஏன் வெளியிட்டேன் என்ற காரணத்தை கூறியுள்ளார்.


தமிழ்,மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தீப்தி சதி. பல்வேறு மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தமிழில் நானும் சிங்கிள் தான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை தீப்தி சதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பிகினி புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவியது. பரபரப்பிற்காக நடிகை தீப்தி சதி இது போன்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.

இந்நிலையில் நடிகை தீப்தி சதி அந்த புகைப்படத்தை வெளியிட்டதற்கான உண்மையான காரணத்தை கூறியுள்ளார். இதைப் பற்றி பேசிய அவர் நான் நீச்சல் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நான் தனியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த புகைப்படமானது தான் முதன் முதலில் மராத்தி மொழியில் நடித்த லக்கி என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் எடுக்கப்பட்டது ஆகும்.

முதலில் அந்த காட்சியில் நடிக்க நான் மிகவும் தயங்கினேன். ஆனால் அந்த காட்சி அத்திரைப்படத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்ததால் மட்டுமே நான் அந்த காட்சியில் நடித்தேன். இந்த புகைப்படத்தை நான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதும் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைக் கூறி வந்திருந்தனர். அந்தத் திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்திற்கு அதுபோன்ற காட்சிகள் அவசியம் என்பதால் மட்டுமே நான் கவர்ச்சியாக நடித்தேன். இல்லையென்றால் கவர்ச்சியாக நடித்து இருக்க மாட்டேன் எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.