பிரபல நடிகைக்கு அவசர கல்யாணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிரபல நடிகை ஒருவர் தான் 5 வருடமாக காதலித்து வந்த டான்ஸ் மாஸ்டரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.


சித்து பிளஸ் டூ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சாந்தினி. முதல் படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனுவுடன் ஜோடியாக நடித்தார். இதன் பிறகு மன்னர் வகையறா, ராஜா ரங்கூஸ்கி, வில் அம்பு என பல்வேறு படங்களில் சாந்தினி நடித்தார். விஜய் சேதுபதியின் கவன் படத்தில் கூட சிறு வேடத்தில் தோன்றி கவர்ச்சி விருந்து அளித்திருப்பார் சாந்தினி.

ஆனால் சாந்தினி நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் சாந்தினி சிரமப்பட்டு வந்தார். இதனிடையே கடந்த ஐந்து வருடங்களாக நந்தா என்பவரை சாந்தினி காதலித்து வந்துள்ளார். டான்ஸ் மாஸ்டரான நந்தாவிடம் நடனம் பழகச் சென்ற போது சாந்தினிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

   இதனிடையே பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சாந்தினியின் குடும்பத்தினர் அவருக்கு திருமண வரண் பார்க்க ஆரம்பித்துள்ளனர். அப்போது தான் நந்தாவை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சாந்தினி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வேறு வழியில்லாமல் சாந்தினியின் காதலுக்கு அவரது பெற்றோர் பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.   மேலும் திருமணத்தையும் உடனடியாக நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் சாந்தினி – நந்தா திருமணம் சென்னையில் நாளை அவசர அவசரமாக நடைபெற உள்ளது. சாந்தினி தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல நடிகையாக இருந்து கொண்டு அவசர அவசரமாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்று திரையுலகில் உள்ள பலரும் அதிர்ச்சி கலந்த கேள்வியை எழுப்பி வருகின்றனர்.