கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமிட்டு ஒரு மாதிரி நடந்து கொள்ளச் சொன்னார்..! பிரபல ஹீரோவுடன் இருந்த போது சீனியர் நடிகைக்கு கிடைத்த அனுபவம்!

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை பாக்யஸ்ரீ, தான் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றி மனம் திறந்து கூறியிருக்கிறார்


பாலிவுட் திரையுலகில் பழம்பெரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை பாக்யஸ்ரீ. நடிகர் சல்மான் கானுடன் இணைந்து மைனே பியார் கியா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபல நடிகையாக வலம் வந்துள்ளார். சமீபத்தில் நடிகை அளித்த பேட்டி ஒன்றில் சல்மான் கானுடன் இணைந்து நடித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றி மனம் திறந்து கூறி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடிகர் சல்மான் கானும், நடிகை பாக்யஸ்ரீ யும் ஒன்றாக இணைந்து நடித்த அந்த திரைப்படம் பாலிவுட் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரும் போட்டோ ஷூட்களுக்கு ஒப்பந்தம் ஆனார்கள். பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவர் என்னையும் நடிகர் சல்மான்கானையும் மிகவும் நெருக்கமாக இருக்கும் விதமான புகைப்படங்களுக்கு போஸ் அளிக்குமாறு நடிகர் சல்மான்கானிடம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர் அம் மாதிரியாக போஸ் அளிப்பதற்கு நான் ரெடி ஆனால் இதற்கான அனுமதியை நீங்கள் நடிகை பாக்யஸ்ரீ இடம் இருந்து தான் பெற வேண்டும். அவர்கள் ஒப்புக் கொண்டால் நான் இதில் நடிக்க ஒப்புக்கொள்வேன் என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட நடிகை பாக்யஸ்ரீ இத்தகைய நல்ல உள்ளங்கள் படைத்த பாதுகாப்பான நபர்களுடன் தான் நான் நடித்து வருகிறேன் என்று எண்ணியதாக பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

நடிகை பாக்யஸ்ரீ திரைப்படங்களில் இருந்து விலகி தன்னுடைய கணவன் குழந்தைகளின் மீது கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்போது மீண்டும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை படமாக மாற்றும் திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.