திருமணம் ஆகி 2 குழந்தைகள் பிறந்தும் அதை கேட்கும் நடிகை..! வீடியோவை வெளியிட்டு வெறித்தனம்!

திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையிலும் நடிகை அர்ச்சனா ஹரிஷ், சரக்கு கிடைக்குமா என்று டிக்டாக் செய்து அதனை வீடியோவாக சமூக வலை தளத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


பொதுவாகவே நடிகைகள் சீரியல் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து பிரபலமான கதாநாயகியாக வலம் வருவதை தங்களுடைய வழக்கமாக கொண்டுள்ளனர். அந்தவகையில் நடிகை அர்ச்சனா ஹரிஷ் சீரியல் வாயிலாக சினிமா உலகில் கால் பதித்தார். பொதுவாகவே நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விடுவது வழக்கம். நடிகை அர்ச்சனா ஹரிஷ் திருமணத்திற்கு பின்பு தான் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தில் கவுன்சிலர் மனைவியாக வரும் காமெடி காட்சியில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருப்பார்.

நடிகை அர்ச்சனா ஹரிஷ் தற்போது திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியலிலும் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இவர் தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் தன் வீட்டிலேயே உள்ளார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் நடிகை அர்ச்சனா ஹரிஷ் பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிப்பதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை அர்ச்சனா ஹரிஷ் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை வெளியிட்டுள்ள அந்த பதிவில் தாரை தப்பட்டையில் இடம்பெறும் சரக்கு கிடைக்குமா என்ற காட்சிக்கு டிக்டாக் செய்து அதனை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். சரக்கு கிடைக்குமா என்று கேட்ட நடிகையை நெட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்துள்ளனர். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பின்பும் நீங்கள் இவ்வாறு செய்யலாமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை வெளியிட்டுள்ள இந்த புதிய பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.