அமலா பாலின் 2வது கணவருக்கு ஏற்கனவே ஒரு காதலி! திருமணத்திற்கு பிறகு தெரியவந்த உண்மை!

சமீபத்தில் 2வது திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால் கணவர் மீது கோபமாக இருப்பதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.


தமிழ்த்திரையுலகில் மைனா, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அமலாபால். இவர் பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜயை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கீரீடம், மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

திருமணத்துக்கு பிறகு தனுஷ் தனது படத்தில் அமலாபாலை நடிக்க வைத்ததால், பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் தனது சொந்த விருப்பத்தின் பேரில் விவாகரத்து செய்ததாக தெரிவித்திருந்தார். இதற்கிடையே அமலாபாலும், இந்தி பாடகர் பவ்னிந்தர் சிங்கும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதற்கிடையே இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அமலா பால் தனது கணவர் மீது கோபமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்குக் காரணம் 2வது கணவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அதை மறைத்துவிட்டதால் அமலாபால் கோபமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.