படுக்கை அறை காட்சிகளில் நடித்ததால் ஏற்பட்ட மோசமான அனுபவம்! தமிழ் நடிகை வெளியிட்ட வேதனை தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஆண்ட்ரியா ஆவார். இவர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் பட்டையை கிளப்பி வருகிறார்.


தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் ஆயிரத்தில் ஒருவன், தரமணி மற்றும் பல முக்கிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கி வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் வலம் வரும் இவர் சமீபத்தில் வடசென்னை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

வடசென்னை திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா படுக்கையறை காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் நடித்தபிறகு படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக வருகின்றன எனவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல கதை மற்றும் நல்ல கதாபாத்திரம் சரிவர அமைந்தால் சம்பளத்தை குறைத்துக் கொண்டும் கூட நடித்து வருவதாக நடிகை ஆண்ட்ரியா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.