கோடையில் திடீரென்று மழை பெய்ததால் நடிகை அமலாபால் பேண்ட் கூட அணியாமல் வெளியே ஓடிவந்து தனது வீட்டில் உள்ள மாமரத்தை சுற்றி மகிழ்ச்சியில் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
திடீர் மழையை பார்த்து பரவசம்..! பேண்ட் போடாமல் வெளியே ஓடி வந்த அமலா பால்..! வீடியோ உள்ளே!

மைனா திரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை அமலா பால் தெய்வத் திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபல நடிகையானார். பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் சமீபத்தில் ஆடை என்ற திரைப்படத்தில் தனது துணிச்சலான நடிப்பின் மூலம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் திரைப்பட சூட்டிங், வெளிநாடு பயணம் ஆகிய அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகையால் பிரபலங்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூக வலை தளங்களில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஊரடங்கு காரணமாக கேரளாவில் உள்ள தனது வீட்டில் தங்கி வரும் நடிகை அமலா பால் தனது அம்மாவுடன் நேரத்தை கழித்து வருகிறார். இந்நிலையில் நேற்று திடீரென தமிழகத்தின் சில பகுதிகளிலும் கேரளாவிலும் திடீரென கோடையை தணிக்கும் வகையில் மழை பெய்தது. இதனால் கோடை மழையை கண்ட அமலாபால் பேண்ட் போடாமல், டாப் மட்டும் அணிந்து வெளியே வந்து தனது வீட்டிலுள்ள நாய்க்குட்டியை தூக்கிகொண்டு தன் வீட்டு வாசலில் உள்ள மாமரத்தை சுற்றித்திரிந்து ஆட்டம் போட்டுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் மா மரத்தில் உள்ள மாங்காய்களுக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியில் திளைத்தார். அமலா பால் மாமரத்தை சுற்றி ஆட்டம் போட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.