திருமணம் செய்த சில நாட்களிலேயே 2வது கணவனையும் விவாகரத்து..! அமலா பால் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பிரபல நடிகை அமலா பால் தனது இரண்டாவது திருமணம் பற்றி மனம் திறந்துள்ளார்.


மைனா, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால் ஆவார். கடந்த வருடம் வெளிவந்த ஆடை திரைப்படத்தில் தனது துணிச்சலான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு இவர்கள் இருவரும் முறைப்படி விவாகரத்து செய்து கொண்டனர்.

சமீபத்தில் நடிகை அமலா பால் பவிந்தர் சிங் என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியது. அதற்கேற்றார்போல பவிந்தர் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அமலாபாலை திருமணம் செய்துகொண்டது போல சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த புகைப்படங்களை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அதை பவிந்தர் சிங் உடனடியாக நீக்கி விட்டார். அதன் பின்பு பவிந்தர் சிங் நடிகை அமலாபாலுடன் சேர்ந்திருப்பது போன்ற எந்த புகைப்படத்தையும் வெளியிடவே இல்லை. இதனால் நடிகை அமலாபாலுக்கும் பவிந்தர் சிங் என்பவருக்கும் இடையே காதல் முறிந்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகி வந்தன. 

இந்நிலையில் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தான் இப்போது தனியாக இருப்பதாகவும் தனக்கு எது என்றாலும் அதற்கு தான் தான் என்றும் வேறு யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார். அதாவது தனது வாழ்வை தான் தனியாக வாழ்ந்து வருவதாக அமலா பால் கூறியுள்ளார். இதன் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலா பால் செய்த 2வது திருமணமும் தோல்வியில் முடிந்துவிட்டது தெரியவவந்துள்ளது.

இதற்கு முன்பு வரை பாடகர் பவிந்தர் சிங்கை தன்னுடைய வாழ்க்கை என்று கூறி வந்தவர் தற்போது தான் தான் தனது வாழ்க்கை என்று கூறியுள்ளார். மேலும் பவிந்தர் சிங் திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டதால் ஏற்பட்ட எரிச்சலில் அவரை அமலா பிரிந்துவிட்டதாக கூறுகிறார்கள்.