சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் பாத்திரம் கழுவிய அமலா..! ஆனால் பிரபல நடிகருக்கு 2வது மனைவி ஆன பிறகு அவருக்கு ஏற்பட்ட நிலை..! என்ன தெரியுமா?

1980 காலகட்டங்களில் தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்தவர் நடிகை அமலா .


விமான கடற்படை அதிகாரியாக வேலை செய்து வந்த நடிகை அமலாவின் தந்தை பல ஊர்களுக்கு சென்று சுற்றி திரிந்து கொண்டிருப்பாராம். இதனால் அமலா சென்னையிலேயே ஹாஸ்டலில் தங்கி கல்லூரி படிப்பை தொடர்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் அமலாவின் அம்மா மற்றும் அப்பா இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் நடிகை அமலா சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பாத்திரம் கழுவி சாப்பாட்டு செலவை பார்த்துக் கொண்டுள்ளார்.

பின்னர் நடிகை அமலாவுக்கு நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று தன்னுடைய செலவுகளைப் பார்த்துக் கொண்டுள்ளார். பின்னர் இயக்குனர் டி இராஜேந்திரன் அவர்கள் அமலாவுக்கு மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தி நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். இதனால் நடிகை அமலாவுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 1992ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலக  முன்னணி நடிகர் நாகார்ஜுனாவை நடிகை அமலா காதலித்து திருமணம் செய்துகொண்டு அவருக்கு இரண்டாவது மனைவி ஆனார். நடிகை அமலாவின் இரண்டு மகன்களும் தற்போது திரையுலகில் ஹீரோக்களாக கலக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.