வயசு தான் 52..! அந்தக்கால கனவுக்கன்னி அமலா வெளியிட்டுள்ள வீடியோவை (உள்ளே) பாருங்கள்..!

பிரபல நடிகை அமலா உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


1980 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா ஆவார். இவர் டி ராஜேந்திரன் இயக்கத்தில் மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு மெல்ல திறந்தது கதவு, சத்யா, கொடி பறக்குது, வேலைக்காரன் போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் கடந்த 1992ஆம் ஆண்டு பிரபல நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நடிகை அமலா ஏறக்குறைய கைவிட்டார் என்றே கூறலாம்.

தற்போது 52 வயதாகும் நடிகை அமலா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் 52 வயதாகும் நடிகை அமலா ஆண்களுக்கு இணையாக பளுவை தனது தோளில் தூக்கி வைத்து உடற்பயிற்சி செய்கிறார். இதைக் கண்ட அவரது ரசிகர்கள் 52 வயதில் இப்படி உடற்பயிற்சி செய்கிறார்கள் என்று வாயடைத்துப் போய் உள்ளனர். மேலும் உடற்பயிற்சியாளர் யாரும் அவர் உடற்பயிற்சி செய்யும் போது உதவிக்கு அருகில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவின் இறுதியில் நடிகை அமலா இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சியை செய்து நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.