பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆலியா மானசா சீமந்த விழாவில் நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த அவரது தாயார் பங்கேற்று ஆசீர்வதித்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை அந்தத் தம்பதியினருக்கு தந்துள்ளது.
கல்யாணத்திற்கு வராமல் வளைகாப்பிற்கு வந்த அம்மா..! நெகிழ்ச்சியில் ராஜா ராணி செம்பா செய்த செயல்!
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகை ஆலியா மானசா. இவர் அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகர் சையத் அசருதீன் என்பவரை காதலித்து வந்தார்.
பின்னர் ஆலியாவின் வீட்டில் அவரது பெற்றோர் இந்த காதல் திருமணத்திற்கு சம்மதிக்காததால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.இதனால் கோபமடைந்த ஆல்யாவின் தாயார் அவரிடம் இத்தனை நாட்கள் பேசாமல் இருந்தார். இன்னிலையில் நடிகை ஆலியா மானசா கர்ப்பம் தரித்து இருக்கிறார்.
ஆகையால் அவருக்கு சீமந்த விழா நடைபெற்றுள்ளது. இத்தனை நாட்கள் பேசாமல் இருந்த ஆல்யாவின் தாயார் கலந்துகொண்டு தனது மகளை ஆசிர்வாதம் செய்திருக்கிறார். இதனால் நடிகை ஆலியா மானசா மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்திருக்கிறார். தற்போது ஆலியா மானசா சீமந்த விழாவில் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.