படுக்கைக்கு அழைத்த மிகப்பெரிய இயக்குனரால் 3 வருடங்கள் ஐஸ்வர்யா ராஜேஸ் பட்ட பாடு..! அவரே பகிர்ந்த ஆரம்பகால சினிமா அனுபவம்!

தன்னை படுக்கைக்கு அழைத்த மிகப்பெரிய இயக்குனர் ஒருவரால் 3 வருடங்களுக்கு மிகவும் கஷ்டத்தை அனுபவித்ததாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் கூறியுள்ளார்.


அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஸ் கூறியிருப்பதாவது, மானாட மயிலாட நிகழ்ச்சியில் கிடைத்த புகழை தொடர்ந்து சினிமா, சீரியல் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பெரிய இயக்குனர்கள், நடிகர்களை தேடிச் சென்று வாய்ப்பு கேட்டேன்.

அப்போது எல்லா துறைகளிலும் இருப்பதை போலவே இந்த துறையிலும் இருந்தது. பாலியல் ரீதியிலான அழைப்புகள் இருந்தன. ஒரு மிகப்பெரிய இயக்குனரிடம் சென்று வாய்ப்பு கேட்டேன். அதற்கு அவர் நீ ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு இல்லை, காமெடியனுக்கு ஜோடியாக கவர்ச்சி வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன். மேலும் அந்த இயக்குனர் என்னிடம் வேறு சிலவற்றையும் எதிர்பார்த்தார். நான் அவர் கேட்டதை கொடுக்கவில்லை. இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. மிகவும் கஷ்டம் அனுபவித்தேன். இவ்வாறு அந்த பேட்டியில் ஐஸ்வர்யா கூறியுள்ளார்.