நிர்வாண யோகா! முன்னணி டிவி நடிகை வெளியிட்ட முகம் சுழிக்க வைக்கும் போட்டோவால் சர்ச்சை!

பல ஹிந்தி சீரியல்களின் மூலம் நடித்து பிரபலமானவர் தான் ஆஷிகா கோராடியா.


ஆஷிகா கோராடியா பல முன்னணி இந்தி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமான வரும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர். இவர் பால் , நாகினி போன்ற பல மிகவும் பிரபலமான சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். ரசிகர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்டவர் என்றே கூறலாம். 

பொதுவாகவே இவரிடம் கவர்ச்சிக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. தற்போது இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆஷிகாவிற்கு யோகாசனத்தில் மீது மிகுந்த ஆர்வம் உடையவர் . ஆகையால் பல யோகாசனங்கள் செய்யும் விதமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர் . 

ஆனால் தற்போது ஒரு புதுவிதமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதாவது அவர் நிர்வாண கோலத்தில் யோகா செய்வது போல ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் கேப்சனாக , பெண்கள் தங்களுடைய உடைகளை வைத்து தங்களுடைய அங்கங்களின் மறைப்பது பற்றியும் விமர்சனம் செய்துள்ளார். "கடவுளின் படைப்பில் பெண்களின் உருவம் என்பது ஒரு மிகப்பெரிய வரம் அதை ஏன் அடுத்தவருக்கு காட்டாமல் மறைத்து வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்" .

பின்னர்  இடுப்பு முழுவதுமாக தெரியும் அளவிற்கு புடவை கட்டினால் அது சரி ஆனால் பிகினி அணிந்தால் அது மிகப்பெரிய தவறு என கருதுகிறது இந்த சமுதாயம் எனவும் கமெண்ட் செய்துள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த இவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர் . தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட இந்த புகைப்படம் வைரலாகி கொண்டிருக்கிறது.