கஷ்ட காலத்தில் சரவணன் கேட்ட உதவி! மதிக்காமல் சென்ற சேரன்! திரையுலக பிரபலம் சற்று முன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பிக் பாஸ் வீட்டில் நடிகர் சரவணனுக்கும் இயக்குனர் சேரனுக்கும் இடையே தொடக்கம் முதலே பனிப்போர் நிலவி வந்தது .


இந்நிலையில் நேற்றைய முன் தினம் நடிகர் சரவணன் இயக்குனர் சேரனை ஒருமையில் பேசி அவரை அனுமதித்தார் . இதனை கண்ட  பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள்  மற்றும் ரசிகர்கள்  பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் சேரன் மற்றும் நடிகர் சரவணன் ஆகிய இருவருக்கும் தெரிந்த நண்பர் மற்றும் நடிகருமான ராமதாஸ் பேட்டி ஒன்றில் , நடிகர் சரவணனும் ஹீரோவாக இருந்தவர் தான் . ஒரு இயக்குனருடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவருக்கும் தெரியும் .

மேலும் சேரனுக்கும் சரவணனுக்கும் முன்பே எந்த பிரச்சினையும் இல்லை. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சூழ்நிலைகளால் ஏற்பட்ட பிரச்சனை தான் இது . நடிகர் சரவணன் தனது கஷ்ட காலத்தில் இயக்குனர் சேரன் அவர்களிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட தாகவும் , அதற்கு தன்னை சேரன் மதிக்கவில்லை எனவும் நடிகர் சரவணன் என்னிடம் இதற்கு முன்னர் கூறியிருந்ததாகவும் நடிகர் ராமதாஸ் கூறியுள்ளார் . 

நடிகர் ராமதாஸ்  நிறைய தமிழ் படங்களில் திரைக்கதை எழுத்தாளராக ஆர்கே செல்வமணி, மணிவண்ணன் ஆகியோர் உடன் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . திரையுலகில் இவருக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. இவரது வீட்டு திருமணத்திற்கு சென்ற போது செல்பி எடுக்க வந்தவரின் கைகளை தட்டிவிட்டு சிவக்குமார் சர்சசையில் சிக்கினார்.