நடிகர் சங்கத் தேர்தல் ஏற்கனவே திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை மறுநாள் நடிகர் சங்கத் தேர்தல்! உயர் நீதிமன்றம் அதிரடி! உற்சாகத்தில் விஷால்!
நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஞாயிறன்று நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்தது. விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு சவால் விடும் வகையில் இரு அணியினரும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் சுமார் 60 பேர் முறைகேடாக நீக்கப்பட்டுள்ளதாக கூறி தேர்தலுக்கு மாவட்ட பதிவாளர் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனால் திட்டமிட்டபடி ஞாயிறன்று நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறாது என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலை ரத்து செய்து மாவட்ட பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விசால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 60 பேர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப் பட்டது சரியான நடவடிக்கைதான் என்று கூறியது.
அதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே அறிவித்தபடி நடிகர் சங்கத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் விஷால் அணியினர் உற்சாகமடைந்துள்ளனர்.