அனிஷா ரெட்டி ரிலீஸ் செய்த புதிய புகைப்படம்! விஷால் வாழ்க்கையில் அடுத்தடுத்து அடிக்கும் புயல்! கரை ஏறுவரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் மற்றும் அனிஷா ஆகிய இருவரின் திருமணம் நின்று விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடிகர் விஷாலுக்கும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை அனுஷாவிருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதற்குப் பின்னர் அவர்களுடைய திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை விஷாலும் அவரது வருங்கால மனைவியான அனிஷாவும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். இத்தனை பார்த்த நடிகர் விஷாலின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை அனிஷா தனக்கும் விஷாலுக்கும் இடையில் நடைபெற்ற நிச்சயதார்த்த புகைப்படங்களை திடீரென்று நீக்கிவிட்டார். இதனைப் பார்த்த இவர்களது ரசிகர்கள் இவர்களுடைய திருமணம் நின்று விட்டதாக கூறிவந்தனர். இந்நிலையில் இதற்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார் அனிஷா. 

அனிஷா தெலுங்கு திரை உலகில் முதன்முதலில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் . நடிகர் விஷாலும் அனிஷாவும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இருவீட்டார் சம்மதத்தோடு இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தன.

ஆனால் தற்போது திடீரென்று அந்தப் புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இருந்து நீக்கிவிட்டனர் . இதனை அறிந்த ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் திருமணம் நின்று விட்டதாக கருதினார் ஆனால் திடீரென்று விஷாலின் பிறந்தநாளுக்கு நடிகை அனிஷா வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அனிஷா விஷாலுடன் இருக்குமாறு உள்ள புகைப்படத்தை போட்டு அதில் நீங்கள் எப்போதும் நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டுமென்றும் பதிவிட்டிருந்தார் .

இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்கள் என்றுதான் கூற வேண்டும். மேலும் இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.