எவன எங்க உட்கார வைக்கனுமோ அவன அங்க உட்கார வைங்க! பிகில் பட விழாவில் விஜயின் அரசியல் பஞ்ச்!

எவன எங்க உட்கார வைக்கனுமோ அவனை அங்க உட்கார வைங்க என்று நடிகர் விஜய் பிகில் படவிழாவில் பேசியிருப்பது அரசியலை மனதில் வைத்து தான் என்று பேச்சு எழுந்துள்ளது.


வாழ்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசை படாதீங்க அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாங்க. விளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க.. விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க.

எதனை யாரால் முடிக்க முடியும் என பார்த்து எவனை எங்க உக்கார வெக்கணும்னு திறமையை வெச்சு முடிவு பண்ணுங்க. பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல். இது போன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க என் ரசிகர்கள் சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க.

பேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வறுத்தப்பட்ட அளவு நானும் வறுத்தப்பட்டேன்.. என் போட்டோ கிழிங்க உடைங்க என் ரசிகன் மேல கை வைக்காதீங்க. என் ரசிகர்கள் எவ்வளோ ஆசைகளோட கனவோட சிரமத்துள பேனர்லாம் வெக்குறாங்க அதை கிழிச்சா அவங்களுக்கு கோவம் வருவது நியாயம் தான். அதுக்காக அவங்க மேல கை வைக்காதீங்க. இது வேண்டுகோள்! கேக்க முடிஞ்சா கேளுங்க இல்லானா..

லைப் கூட கால்பந்து மாதிரிதாங்க கோல் போட முயற்சி செய்வோம். தடுக்க ஒரு கூட்டமே வரும். சில சமயம் சேம் சைட் கோல் போடுவான் நம்மாளே. இவ்வாறு விஜய் பேசினார். இதில் விஜய் கூறிய எவனை எங்க உட்கார வைக்கனுமோ அவனை அங்கு திறமையின் அடிப்படையில் உட்கார வைக்கனும்னு சொல்லியிருப்பது அரசியல் தான் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.