தமிழ்நாட்டு தண்ணீரை குடித்தாலே அவன் தமிழன் தான்! ரஜினியை நெகிழ வைத்த விஜய் அப்பா எஸ்ஏசி!

தமிழ்நாட்டின் தண்ணீரை ஒருவர் குடித்தாலே அவர் தமிழன்தான் என்று ரஜினியை நெகிழ வைத்து பேசினார் தளபதி விஜயின் தந்தை எஸ் .ஏ. சந்திரசேகர்.


உலகநாயகன் கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கமல் 60 என்ற நிகழ்ச்சி சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தளபதி விஜயின் தந்தையான எஸ். ஏ . சந்திரசேகர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கமலும் ரஜினியும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கும் பொழுது எஸ்ஏசி தன்னுடைய சிறப்பு உரையை துவங்கினார். 

அப்போது பேசிய அவர், நடிகர் கமலஹாசன் துணிச்சலோடு அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார் . அவரைப்போல் நடிகர் ரஜினியும் துணிச்சலாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் அரசியலில் மிகப்பெரிய விஸ்வரூபத்தை காட்டுவார் என்று அவர் பெருமையாக பேசினார்.

ரஜினியும் கமலும் ஒன்றாக அரசியலில் காலடி எடுத்து வைத்தால் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகவும் நல்லது என்று கூறினார். மேலும் பேசிய அவர் தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்பது கிடையாது. தமிழ்நாட்டின் தண்ணீரை ஒருவன் குடித்துவிட்டால் அவன் தமிழன் தான் என்று கூறினார்.

எஸ்ஏசி - ன் இந்த கருத்திற்கு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.