1 நாயகன் 2 நாயகிகளுடன் எஸ்ஏசி இயக்கியுள்ள A படம்..! அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ள படத்திற்கு, சென்சார் குழு A சான்றிதழ் வழங்கியுள்ளது.


விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ், தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி என பல மொழிகளில் இதுவரை 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 1981-ஆம் ஆண்டு தமிழில் "சட்டம் ஒரு இருட்டறை" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து வெற்றி, நான் சிகப்பு மனிதன் ,முத்தம் என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்பு , மீண்டும் இயக்குனராக உருமாறி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். 

தற்போது இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேப்மாரி என்ற திரைப்படத்தை அவரே இயக்கி தயாரித்தும் உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார் . அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா மற்றும் வைபவி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், லிவிங்ஸ்டன் ,சத்யன் போன்றோரும் நடித்துள்ளனர். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் திரைப் படத்தை திரையிடும் பணியில் தீவிரமாக படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த சென்சார் குழு அடல்ட் காமெடியாக உருவாகியுள்ள இந்த கேப்மாரி திரைப்படத்திற்கு A சான்றிதழ் அளித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின்பு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் தான் அவர் இயக்கும் கடைசி திரைப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.