நடிகர் விஜய் சேதுபதி திடீர் அரசியல் அவதாரம்! ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

முன்னணி தமிழ் நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி அரசியல் அவதாரம் எடுத்துள்ளார்.


ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனிபோடும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் பிரச்சினைகளுக்காகவும் இவர் குரல் கொடுத்து வருகிறார்.

 

தமிழக விவசாயிகளின் தலையாய பிரச்சனையான காவிரி பிரச்சனை, தமிழர்களின் பிரச்சனையான ஜல்லிக்கட்டு ஆகியவற்றுக்கு இவர் குரல் கொடுத்தார். சபரிமலை விவகாரத்திலும் தைரியமாக இவர் தனது கருத்தை பதிவுசெய்தார்

 

கடைசியாக பேட்ட படத்தில் இவர் நடித்திருந்தார். முன்னதாக இவரும் திரிஷாவும் சேர்ந்து நடித்த 96 என்ற திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இப்படத்தின் நூறாவது நாள் விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

 

அதில் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியது. அடுத்ததாக விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பெயர் துக்ளக். இந்தப் படத்தை புதுமுக இயக்குனரான டெல்லி பிரசாத் என்பவர் இயக்க உள்ளார்.

 

இந்த படத்தில் அரசியல் தலைவராக விஜய் சேதுபதி நடிக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசியல் படமாக துக்ளக் உருவாக உள்ளது.  96 திரைப்படத்திற்கு அசத்தலாக இசையமைத்திருந்த கோவிந் வசந்தாதான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

 

துக்ளக் படத்திற்கு வசனம் எழுதும் பொறுப்பை, விஜய் சேதுபதியின் நண்பரும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி உள்ளிட்ட படங்களின் இயக்குனருமான பாலாஜி தரணிதரன் ஏற்றுள்ளார்.

 

செவன் கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. ஜூன் மாதத்தில் துக்ளக் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

காதலன் கணவன் காவல் அதிகாரி என பல்வேறு வேடங்களில் சிறப்பாக நடித்து மக்கள் மனதை கவர்ந்து மக்கள் செல்வன் என பெயர் பெற்றவர் விஜய் சேதுபதி. அடுத்ததாக அரசியல்வாதி வேடம் ஏற்க உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.