என்னா ஒரு கட்டிப்பிடி! மேடையிலேயே த்ரிஷாவை மூச்சுத்திணற வைத்த ஹீரோ!

பட விழாவில் நடிகை த்ரிஷாவை இறுக்கி அணைத்து மூச்சுத் திணற வைத்த ஹீரோவால் சலசலப்பு ஏற்பட்டது.


கடந்த ஆண்டு விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் 96 எனும் படம் வெளியானது. கடந்த ஆண்டு வெளியான படங்களில் மிகப்பெரிய ஹிட்டாக 96 படம் அமைந்தது. அண்மையில் இந்த படம் 100 நாட்கள் திரையரங்கில் ஓடியது.

 

   இதனை அடுத்து 96 படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள ஹில்டன் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. ஹீரோ விஜய் சேதுபதி, ஹீரோயின் த்ரிஷா இயக்குனர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

   விழாவுக்கு வந்த அனைவரையும் நடிகர் விஜய் சேதுபதி கட்டிப்பிடித்து வரவேற்றார். ஆனால் த்ரிஷாவை மட்டும் கை குலுக்கி வரவேற்றார். ஆனால் மேடையில் விழாவின் இறுதியில் நடிகை த்ரிஷா பேசிக் கொண்டிருந்தார்.

 

  அவர் பேசி முடித்த பிறகு விஜய்சேதுபதி மேடையேறினார். அப்போது அவர் த்ரிஷாவை பிடித்த கட்டிப்பிடி தான் ஹாட் டாபிக்காகி போனது. பொதுவாக மரியாதை நிமித்தமான கட்டிப்பிடி என்றால் மூன்று அல்லது ஐந்து நொடிகள் வரை நீடிக்கும்.

 

  ஆனால் த்ரிஷாவை கட்டிப்பிடித்த விஜய் சேதுபதி சுமார் ஒரு நிமிடத்திற்கு விடவில்லை. மேலும் கட்டிப்பிடி என்றாலும் சாதாரண கட்டிப்பிடி இல்லை. உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டார்.

 

   முதலில் சிரித்த முகத்துடன் இருந்த த்ரிஷாவுக்கு பிடி இறுகியதும் மூச்சு முட்டியது. இருந்தாலும் கட்டிப்பிடித்திருப்பது விஜய் சேதுபதியாச்சே. சோ த்ரிஷாவும் முடிந்த அளவிற்கு ஒத்துழைப்பு அழைத்தார்.

 

  96 பட வெற்றி விழா கடையில் விஜய் சேதுபதி – த்ரிஷாவின் கட்டிப்பிடி விழாவாகிவிட்டதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறிவிட்டு சென்றனர். அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்