பாகுபலி பிரபாஸ் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
அந்த ஹீரோவ பார்த்தாலே எனக்குள்ள அந்த மாதிரி என்னமோ பண்ணுது! வரலட்சுமி கிக் பேட்டி!!

சிம்புவுக்கு ஜோடியாக போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் வரலட்சுமி. மிகவும் வித்தியாசமான நடிப்பால் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினார். நிபுணன், விக்ரம் வேதா, சத்யா ஆகிய படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்தார்.
இறுதியாக சர்க்கார் திரைப்படத்தில் வில்லி வேடம் ஏற்று அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அடுத்ததாக வெல்வெட் நகரம், சக்தி, ராஜபார்வை என இவர் கையில் ஏராளமான படங்கள் உள்ளன. நடிகர் விஷாலின் சிறுவயது தோழியான வரலட்சுமி தற்போதுவரை அப்படியே தொடர்கிறார்.
இருவருக்குமிடையே காதல் உறவு இருப்பதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வதந்தி பரவியது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நடிகர் விஷால் அண்மையில் அறிவித்தார்.
இவர்களது திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நடிகை வரலட்சுமி தன்னை ஈர்த்த நடிகர் என ஒருவரை குறிப்பிட்டுள்ளார். அவர் வேறு யாரும் அல்ல, பாகுபலி திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் பிரபாஸ் தான்.
பிரபாஸ் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாக நடிகை வரலட்சுமி தற்போது தெரிவித்திருக்கிறார். இதுவரை ஐ லவ் யூ என்று யாரிடமும் சொல்லாத வரலட்சுமி, இனி அந்த வார்த்தையை பிரபாஸ் இடம் சொல்ல வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.