மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பிரபல குணசித்திர நடிகர் தென்னவன்! கண்டுகொள்ளாத திரையுலகம்!

பிரபல குணச்சித்திர நடிகர் தென்னவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


நடிகர் தென்னவன் தமிழ் சினிமாவில் விருமாண்டி, சண்டக்கோழி, சுந்தரபாண்டியன், வகைசூடவா ,ஜெமினி, பேட்டை, கத்தி சண்டை போன்ற பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடித்துள்ளார்.  

இவர் 1990 ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த என்னுயிர் தோழன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். நடிகர் தென்னவன் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராசாத்தி என்ற தொடரில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் தென்னவனுக்கு மூளையில் அட்டாக் ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் திரையுலகினர் யாரும் தென்னவனை கண்டுகொள்ளவில்லை. இந்த செய்தி தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.