அஜித் பயன்படுத்தும் செல்போன் என்ன தெரியுமா? பிரபல நடிகை வெளியிட்ட தகவல் உள்ளே!

நடிகர் அஜித் எந்த வகை செல்போன் பயன்படுத்துகிறார் என்பது பற்றிய தகவலை அவருடன் நடித்த நடிகை ஒருவர் வெளியிட்டுள்ளார்.


நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. இதே போல் அவர் சமூக ஊடகங்களிடம் இருந்தும் அறவே ஒதுங்கியுள்ளார். நடிகர் விஜய் கூட தனது பெயரில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் வைத்துள்ளார். ஆனால் அஜித் தனக்கு ரசிகர் மன்றங்களே தேவையில்லை என்று கலைத்துவிட்டார். அந்த வகையில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றிடம் இருந்தும் அஜித் ஒதுங்கியே நிற்கிறார்.

   இந்த நிலையில் அஜித் பயன்படுத்தும் செல்போன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் எந்த மாடல் செல்போன் பயன்படுத்துகிறார் என்கிற தகவலை அவருடன் நடித்த நடிகை ஒருவர் வெளியிட்டார். விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்துடன்இணைந்து நடித்திருப்பவர் ஜாங்கிரி மதுமிதா இணைந்து நடித்துள்ளார். அவர் இணையதள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

   அவரிடம் படப்பிடிப்பு தளத்தில் அஜித் எப்படி இருப்பார் என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அஜித் படப்பிடிப்பு தளத்தில் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பார் என மதுமிதா கூறினார். அதே சமயம் எப்போதும் தனதுமகள் மற்றும் மகன்குறித்து அஜித் மனம் திறந்து பேசக்கூடியவர் என்றும் மதுமிதா தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் உள்ள செல்போனில் தனது மகன் ஆத்விக்கின் வீடியோவை அவ்வப்போது பார்த்து ரசிப்பார் அஜித் என்றும் மதுமிதா கூறியுள்ளார்.

   அப்போது மதுமிதாவிடம் அஜித் என்ன செல்போன் பயன்படுத்துகிறார் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அஜித், தான் மற்றவர்களுடன் பேசுவதற்கு சாதாரணமான செல்போன் ஒன்று வைத்திருப்பதாக மதுமிதா கூறினார். அந்த போனை பார்க்க லேட்டஸ் மாடல் போல் இல்லை என்று அவர் தெரிவித்தார். ஆனால் தனது மகன் வீடியோவை பார்க்க அஜித் புதிய செல்போன் ஒன்றை வைத்துள்ளதாகவும் அது ஐபோனாக இருக்கலாம் என்றும் மதுமிதா கூறியுள்ளார்.

   மேலும் அஜித்தின் மகன் ஆத்விக் வேட்டி கட்டிக் கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்று இருப்பதாகவும், அதைத்தான் அஜித் அவ்வப்போது பார்த்து ரசிப்பார் என்றும் மதுமிதா தெரிவித்துள்ளார். அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை ஒரு போதும் தான் மறக்க முடியாது என்றும் மதுமிதா கூறியுள்ளார்.