செல்போனில் இறந்துபோன தன்னுடைய முதலாளியான சுஷாந்தின் முகத்தைப் பார்த்து கண்களில் கண்ணீரோடு முகம் சுண்டி ஆவலோடு காத்திருக்கும் அவரது வளர்ப்பு நாயை பார்க்கும்பொழுது நம்முடைய கண்களிலும் கண்ணீர் பெருக ஆரம்பிக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
செல்போனில் சுஷாந்த் முகம்! கண்களில் கண்ணீர்..! திரும்பி வராத முதலாளிக்கு வாசலில் காத்திருக்கும் வளர்ப்பு நாய்! கண்களை குளமாக்கும் வீடியோ உள்ளே!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் நெஞ்சங்களில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவரது நண்பர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீசில் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இவரது இறப்பு செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் நண்பர்கள் என பலரும் அதிர்ச்சியில் உறைந்து போனதுமட்டுமல்லாமல் அவரது புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சுஷாந்த்தின் செல்லப்பிராணியும் தன்னுடைய முதலாளி இல்லாமல் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.
தன்னுடைய முதலாளிக்கு என்ன ஆனது என்றே தெரியாத அந்த செல்லப்பிராணி சுஷாந்தின் வருகைக்காக ஆவலோடு வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறது. தற்போது சுஷாந்த்தின் செல்ல பிராணியான பட்ஜின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அந்த செல்லப்பிராணியானது செல்போனில் இருக்கும் சுஷாந்த்தின் புகைப்படத்தை பார்த்த உடன் அதன் கண்களில் இருந்து நீர் வடிய ஆரம்பிக்கிறது.
இனிமேல் திரும்பியே வர முடியாத தூரத்திற்கு சென்று அதனுடைய முதலாளியின் வருகைக்காக வாசலிலேயே வருத்தத்தோடு காத்துக் கொண்டிருக்கிறது அந்த செல்லப்பிராணி. தற்போது இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பலரது மனங்களில் நெகழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.