சுஷாந்த் சிங் காதுகளில் கேட்ட மர்ம குரல்..! விடாமல் துரத்திய மரணம்..! நெருங்கிய பெண்மணி வெளியிட்ட ஷாக் தகவல்கள்!

நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தத்தில் இருந்த பொழுது அவரது காதுகளில் மர்ம குரல் கேட்டதாகவும் அந்த குரல் அவரை விடாமல் துரத்தி வந்ததாகவும் அவருடைய நெருங்கி பெண்மணி சுஹ்ரிதா செங்குப்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.


நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக பலரும் கூறும் நிலையில் அவர் மரணத்தில் மர்மம் நீடித்து வருவதாக அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர். இதனால் போலீசார் அவரது தற்கொலை வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இது கொலையா அல்லது தற்கொலையா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் நெருங்கிய உறவினரான சுஹ்ரிதா செங்குப்தா அதிர்ச்சி தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எழுத்தாளர் சுஹ்ரிதா, நடிகர் சுஷாந்த்தை மகேஷ் பட்டின் அலுவலகத்தில் சந்தித்ததாக கூறியிருக்கிறார். அதாவது சுஷாந்த் சதக் 2 திரைப்படத்தில் தனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று மகேஷ் பட்டின் அலுவலகத்திற்கு வந்ததாக அவர் கூறியிருக்கிறார். அப்போதுதான் அவர் அடிக்கடி வந்து சந்தித்ததாக கூறுகிறார்.

அப்போது அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் ஆனால் மன அழுத்தத்திற்கான மருந்துகளை அவர் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் எழுத்தாளர் சுஹ்ரிதா செங்குப்தா கூறியிருக்கிறார். மருந்து உட்கொள்வதை தவிர வேறு எதுவுமே தனக்கு உதவி செய்யாது என்று நன்கு அறிந்திருந்தும் அதனை உட்கொள்ளவில்லை என்று சூஹ்ரிதா கூறியிருக்கிறார். அந்நேரத்தில் தான் சுஷாந்தின் நெருங்கிய தோழியான ரியா, அவர் சரியான நேரத்தில் மருந்தை உட் கொள்கிறாரா என்பதை கவனித்து வந்தார். 

மருந்தே உட்கொள்ளாமல் தனிமையில் தவித்து வந்த நடிகர் சுஷாந்தின் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. அப்போதுதான் அவர் தன்னைச் சுற்றி ஏதோ ஒரு குரல் கேட்பதாகவும் அது தன்னை எப்பொழுதும் துரத்திக்கொண்டே வருவதாகவும் கூறி இருக்கிறார். அப்படியாக ஒருநாள் சுஷாந்த் தன்னுடைய வீட்டில் ரியா உடன் இணைந்து அனுராக் காஷ்யப் நடித்த திரைப்படத்தை பார்த்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவர் ரியாவிடம் நான் காஷ்யப்ன் ஆஃபரை வேண்டாம் என்று சொன்னேன், இப்போது அவர் என்னை கொல்ல வரப்போகிறார் என்று கூறியதாக சுஹ்ரிதா செங்குப்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.