மாதம் ரூ.4 1/2 லட்சம் வாடகையில் வீடு..! உண்மையை மறைத்த வேலைக்காரர்கள்! சுஷாந்த் சிங் தற்கொலை செய்தது எப்போது? வெளியாகும் பகீர் தகவல்கள்!

நிதி நெருக்கடியால் தான் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் தங்களுடைய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் நெஞ்சங்களில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவரது நண்பர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீசில் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் நடிகர் சுஷாந்த் சிங் கடும் நிதி நெருக்கடியால் இந்த தற்கொலையில் ஈடுபட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் நடிகர் சுஷாந்த் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் மாதம் ரூ.4 1/2 லட்சம் வாடகையில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இதன் மூலம் சுஷாந்த் நிச்சயமாக நிதி நெருக்கடியால் அவதி படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏனெனில் முன்னணி நடிகராக வலம் வரும் அவருக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று அவரது அக்கா கூறியிருக்கிறார்.

சுஷாந்த் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருந்த நேரத்தில் அவரோடு மூன்று பேர் இருந்துள்ளனர். அதாவது வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்கள் இருவர் மற்றும் ஒரு ஆர்ட் டிசைனர் உட்பட மூவர் அந்த சமயத்தில் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் முடிவில் அவர்கள் மீது சந்தேகமில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் போலீஸ் விசாரணையில் பொய் கூறியுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

அதாவது அவர்களிடம் விசாரித்த பொழுது சுஷாந்த் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும். ஏனெனில் நடிகர் சுஷாந்த் காலையில் தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து இருக்கிறார், பின்னர் தன்னுடைய வேலைக்காரர்களிடம் ஜூஸ் வேண்டும் என்று கூறி வாங்கி அருந்தி இருக்கிறார். அதற்கு பின்பு சில நிமிடங்கள் டிவியும் பார்த்திருக்கிறார். இதை தொடர்ந்துதான் உறங்குவதற்காக தன்னுடைய படுக்கை அறைக்கு சென்று இருக்கிறார். 

அதாவது தூக்கம் வருகிறது என்று காலை 10 மணிக்கு உறங்கச் சென்ற நடிகர் சுஷாந்த் 1:30 வரை தன்னுடைய அறையின் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த வீட்டிலிருந்த வேலைக்காரர்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று உள்ளனர். அப்பொழுதுதான் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் நடிகர் சுஷாந்த் தன்னுடைய நண்பர் மற்றும் சகோதரியிடம் செல்போனிலும் பேசியிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.