காதலியுடன் கடைசி புகைப்படம்..! நவம்பரில் திருமண ஏற்பாடு..! சுஷாந்த் சிங் தற்கொலையில் நீடிக்கும் மர்மம்!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் தன்னுடைய காதலியுடன் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


34 வயதாகும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிக்க சென்ற சுஷாந்த் சிங் தன்னுடைய அசாதாரணமான நடிப்பால் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அதிலும் குறிப்பாக எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட எம்எஸ் தோனி அண்ட்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலமாக உலகெங்கும் உள்ள பலரது மனதில் நீங்கா இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்புமிக்க ஒரு நடிகர் தற்கொலை செய்து கொண்டது என்பது அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் கடைசியாக தான் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நடிகை ரியா சக்கரபோர்த்தி என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் சுஷாந்த் சிங் உடற்பயிற்சி செய்துவிட்டு தனது ஜிம்மை விட்டு அந்த நடிகையோடு வெளியேறுகிறார். அவர்கள் இருவரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் உடைகளை அணிந்திருந்தனர். 

ஆனால் இதுகுறித்து நடிகை ரியாவிடம் கேட்டபொழுது, நானும் சுஷாந்த்தும் நல்ல நண்பர்களை தவிர எங்கள் இருவருக்கும் இடையில் வேறு ஒன்றும் கிடையாது என்று கூறியிருக்கிறார். மேலும் சுல்தான் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததை அறிந்த அவரது கசின், சேனல் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சுஷாந்த் சிங் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் அவரது திருமண ஏற்பாடுகள் விரைவில் தொடங்க இருந்ததாகவும் கூறியிருக்கிறார். 

நடிகர் சுஷாந்த் சிங் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண்ணின் பெயரைக் குறிப்பிடாமல், அவரது கசின் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மும்பையில் வைத்து சுஷாந்த் இருக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் அனைவரும் முடிவு செய்திருந்ததாகவும் குறிப்பிட்டு கூறியிருக்கிறார். மேலும் கூடிய விரைவில் உறவினர்கள் அனைவரும் மும்பைக்கு சென்று இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தொடங்க இருந்ததாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் சுஷாந்த் இருக்கு ஒரு நல்லது நடைபெறு வதற்கு முன்பாகவே அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது எங்கள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.