20 வருடத்திற்கு முன்னால் கவுண்டமணி காலில் விழுந்த சூரி! ஆனால் இப்போது..? சூரியே வெளியிட்ட வீடியோ!

தமிழ்சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக விளங்குபவர் நடிகர் சூரி ஆவார்.


வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வந்த பரோட்டா காமெடி மூலம் நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவரின் பரோட்டா காமெடி ஆனது ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் இவர் பரோட்டா சூரி எனவும் அழைக்கப்பட்டு வருகிறார் .

பின்னர் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரானார்.

தமிழ் சினிமாவில் நுழைவதற்கு பல்வேறு தடைகளைத் தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வரும் நடிகர் சூரி கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னால், சுந்தர் சி இயக்கத்தில் கண்ணன் வருவான் என்ற திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணியுடன் ஒரு காட்சியில் நடித்துள்ளார் .

தற்போது இது குறித்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரி வெளியிட்டு தனது ரசிகர்களுக்கும் கவுண்டமணி மற்றும் சுந்தர் சி ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த காட்சியில் மிகவும் ஒல்லியாக காணப்படும் சூரி , நடிகர் கவுண்டமணி நடந்து வரும் போது அவரின் காலில் விழுந்து , ஐயா தெய்வமே என கூறுகிறார். உடனே நடிகர் கவுண்டமணி அவரே தூக்கி எழுப்பி பணம் கொடுக்க செல்ல , நடிகர் சூரி இதெல்லாம் வேண்டாம் நீங்கள் வந்ததே போதும் என கூறி விட்டு செல்கிறார் . இந்த வசனமே நடிகர் சூரி தமிழ் சினிமாவில் முதன் முதலில் பேசி நடித்த வசனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது .

https://t.co/9cjwXf4uWV