சீனியர் நடிகை மீனாவின் வீட்டுக்கு உரிமையாளர் ஆன பிரபல காமெடி நடிகர்..! யார் தெரியுமா?

பிரபல நடிகை மீனாவின் வீட்டை நடிகர் சூரி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


1991 ஆம் ஆண்டு வெளிவந்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிகை மீனா அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், சத்யராஜ் , சரத்குமார், அஜித் போன்ற பலருடன் நடித்து நடிகை மீனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை கைவிட்ட நடிகை மீனா சமீபகாலமாக மீண்டும் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் நடிகை மீனாவுக்கு சொந்தமான சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டை 6.5 கோடிக்கு காமெடி நடிகர் சூரி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சூரி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னாடி காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். நடிகர் சூரியின் அலுவலகத்திற்கு அருகே நடிகை மீனாவின் வீடும் அமைந்துள்ளது.

இந்நிலையில் நடிகை மீனாவின் வீடு விலைக்கு வந்ததை அறிந்த நடிகர் சூரி 6.5 ரூபாய் கோடி கொடுத்து அந்த வீட்டை விலைக்கு வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில வருடங்களில் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வரும் சூரி நடிகை மீனாவின் வீட்டை வாங்கிய சம்பவமானது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.