உயிர் நண்பனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் எடுக்கும் ரிஸ்க்! நட்புக்கு மரியாதை!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பன் ஒருவனுக்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுக்க உள்ளார்.


நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பன் ஒருவனுக்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுக்க உள்ளார்.

   அனைத்து தரப்பு மக்களாலும் அதாவது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பக் கூடிய நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு தமிழகத்தில் நல்ல மார்க்கெட் உள்ள நடிகரும் சிவகார்த்திகேயன்தான். சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் பலர் வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால் சிவகார்த்திகேயனோ தன்னை ஆரம்ப காலத்தில் வளர்த்துவிட்ட தயாரிப்பாளர் ஒருவருக்கு தான தொடர்ந்து படம் நடித்து வருகிறார்.

   அதுமட்டும் அல்லாமல் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து கனா என்கிற முதல் படத்தையும் சிவகார்த்திகேயன் வெளியிட்டுவிட்டார். இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இவர் வேறு யாரும் இல்லை, சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால நண்பர். சிவகார்த்திகேயன் கலக்கப்போவது யாரு புரோகிராம் பண்ணுவது முதல் அவருடன் இருப்பவர் அருண் ராஜா.

   அந்த நட்புக்கு பெருமை சேர்க்கும் வகையில் தான பெண்கள் கிரிக்கெட் என்கிற மார்க்கெட் இல்லாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து அவர் எடுத்த படத்தை தயாரித்தார் சிவகார்த்திகேயன். நண்பன் மேல் நம்பிக்கை வைத்தது வீண் போகவில்லை. கனா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது நீண்ட நாள் நண்பனான நெல்சனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளார்.

   நெல்சன் வேறு யாரும் இல்லை நயன்தாராவை வைத்து கோல மாவு கோகிலா படத்தை எடுத்தவர். கோலமாவு கோகிலா வெற்றிப்படமாக அமைந்தாலும் கூட நெல்சன் தற்போது கையில் வைத்திருக்கும் கதையை திரைப்படமாக எடுக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் முன்வந்துள்ளார். தனது நண்பனுக்கான தான் இந்த ரிஸ்கை எடுக்க உள்ளதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

   திரையுலகில் உச்ச நடிகர்களில் ஒருவராக மாறிய பிறகும் சிவகார்த்திகேயன் தனது நண்பர்களுக்காக அடுத்தடுத்து செய்யும் பேருதவி அவர் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்து கொண்டே செல்கிறது.