சிவகார்த்திகேயன் வாழ்க்கையிலும் எழுந்த விவாகரத்து பிரச்சனை..! மனைவி கர்ப்பமாக இருந்த போது நிகழ்ந்த அந்த சம்பவம்!

நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி கர்ப்பமாக இருந்த போது அவர்களுக்கிடையே விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக வெளியான தகவல் குறித்து தற்போது அவர் மனம் திறந்திருக்கிறார்.


சினிமாவில் கால் பதித்த சிவகார்த்திகேயன் குறுகிய காலகட்டத்திலேயே அதிக ரசிகர்களை பெற்று முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது அவர் சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் உருவாக்கி அதன் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவருடைய வளர்ச்சி இன்றைய சமுதாய இளைஞர்களுக்கு மிகப்பெரிய முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

சிவகார்த்திகேயன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய 35வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார் ‌. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தன்னுடைய மனைவி மற்றும் மகள் பற்றிய பல சுவாரஸ்யமான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தன்னுடைய வாழ்வில் தான் சந்தித்த ஒரு சில விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

அவரது மனைவி திருமணம் செய்து கொண்ட பொழுது அவருக்கு 21 வயதுதான் . என் மனைவி மிகவும் சூப்பராக சிக்கன் மட்டன் என அசைவ வகைகளில் சமைத்து அசத்துவார். அவர் மனைவிதான் வருமான வரி கணக்கு முதல் குழந்தை பராமரிப்பு வரை எல்லா வேலையையும் செய்து வருவதாகவும் சிவகார்த்திகேயன் பெருமையாக கூறினார்.

இப்படியாக அவரது மனைவி கர்ப்பமாக இருந்த சமயத்தில் அவரும் அவரது மனைவியும் விவாகரத்து பெற போவதாக சில தகவல்கள் வெளியாகியது ஆனால் இந்த தகவலை தன்னுடைய மனைவிக்கு தெரியப்படுத்த கூடாது என்று சிவகார்த்திகேயன் உறுதியாக இருந்தாராம்.

 ஆனால் இந்த தகவல் வெளியான அடுத்த நாளே அவரது மனைவி சிவகார்த்திகேயனிடம் சென்று இதுபோல் ஒரு பொய்யான தகவல் உலாவிக் கொண்டிருக்கிறது . திரைத்துறையில் இருந்தால் இது போன்ற தகவல்கள் வெளியானது சகஜம்தான் என்று கூறினாராம். இதனைக் கேட்ட சிவகார்த்திகேயன் நெகிழ்ந்து போனாராம்.

அவருடைய மனைவி அவருக்கு கூறிய வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருந்ததாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.