சிம்பு தம்பி குறளரசன் மதம் மாறியது ஏன்? 1 மாதத்திற்கு பிறகு அம்பலமான திடுக் உண்மை!

சிம்புவின் தம்பி குறளரசனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் ஏன் முஸ்லீம் மதத்திற்கு மாறினார் என்கிற தகவலும் அம்பலமாகியுள்ளது.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு என்கிற சிலம்பரசன். எஸ்டிஆர் என்றும் தனது பெயரை மாற்றிக் கொண்ட அவர், தற்போது நடுத்தர வயதை கடந்துவிட்டார். நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி எனப் பல நடிகைகளுடன் காதல் உறவு செய்து வந்த சிம்பு, அவர்கள் யாரையும் திருமணம் செய்யவில்லை. 

அவரது சக காலத்தில் சினிமாவில் நடிக்க வந்த நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் திருமணமாகி செட்டிலாகிவிட்டனர். சிம்பு மட்டும் இன்னும் பேச்சிலராகவே வலம் வருகிறார். இந்நிலையில், சிம்புவின் சகோதரி இலக்கியாவுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைக்கப்பட்டது. 

இதையடுத்து, சிம்புவுக்கு திருமணம் செய்ய நடவடிக்கை எடுத்தபோது, அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே,
சிம்புவின் தம்பி குறளரசன் ஒரு முஸ்லீம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் வீட்டில் கொடுத்த நிர்பந்தம் காரணமாக, சில நாள் முன்பாக, குறளரசன் முஸ்லீம் மதத்திற்கு மாறினார்.

தற்போது அந்த பெண்கூட குறளரசனுக்கு திருமணம் செய்ய தேதி நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 26ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறும் என்றும், இதுபற்றி டி.ராஜேந்தர் விரைவில் அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.