ஒரே ஒரு வாட்டி ப்ளீஸ்! குஷ்புவிடம் உருகும் சிம்பு!

ஒரே ஒரு வாட்டி என்று ஒரு விவகாரத்தில் நடிகை குஷ்புவிடம் சிம்பு உருகியதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் சிம்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்து வெளியான செக்கச் சிவந்த வானம் படம் வெற்றி பெற்றது. அந்த படத்தில் சிம்புவின் கேரக்டரும் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர்களின் பார்வை சிம்புவை நோக்கி திரும்பியது. உடனடியாக சுந்தர் சி சிம்புவை வைத்து வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு பூஜை போட்டார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

  பொதுவாக சிம்புவை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் பின்னங்கால் பிடரியில் பட ஓடுவார்கள். ஆனால் செக்க சிவந்த வானம் படப்பிடிப்பின் போது சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்தே சுந்தர் சியும் சரி லைக்கா நிறுவனமும் சரி சிம்புவை வைத்து படம் எடுக்க ஒப்புக் கொண்டனர்.

  இதனை தொடர்ந்து படம் எடுத்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கடந்த ஆண்டே படம் தயாரான நிலையில் பொங்கலுக்கு வெளியிட போவதாக சிம்பு அறிவித்தார். ஆனால் படத்தை எடுத்திருப்பது நாங்கள், நீ இல்லை என்றும் அதனால் எப்போது வெளியிடுவது என்று தங்களுக்கு தெரியும் என்றும் கூறி சிம்பு வாயை மூடியது லைக்கா. ஏனென்றால் பொங்கலுக்கு ரஜினி படம் பேட்ட வெளியாக இருந்தது. அப்படி இருக்கையில் அவருக்கு போட்டியாக தங்கள் படத்தை வெளியிட லைக்கா தயாராக இல்லை.

   இதனை தொடர்ந்து பிப்வரி மாதம் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை வெளியிட லைக்கா முடிவு செய்தது. ஆனால் சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த அவர் வரவில்லை. இதனால் சிம்புவின் படத்திற்கு ரெட்கார்டு போடுவது என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. மேலும் சிம்பு படங்களுக்கு இனி ஒத்துழைப்பது இல்லை என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

  இது தெரிந்து தான் விஷால் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நீதிமன்றம் சென்றார் விஷால். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு ரிலீஸ் டேட்டை பைனல் செய்யாமல் தயாரிப்பாளர் சங்கம் இழுத்தடித்து வருகிறது. லைக்கா நிறுவனம் விஷாலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலும் கூட சிம்பு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று விஷால் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

   இதனால் லைக்கா நிறுவனமும் இந்த விவகாரத்தில் சைலன்ட் ஆகிவிட படத்தை வெளியிட சிம்புவே முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்க தலைவர் என்கிற முறையில் விஷால் மனது வைத்தால் ரிலீஸ் டேட் கன்பார்ம் ஆகிவிடும். ஆனால் விஷால் தன் மீது கோபத்தில் இருப்பதால் நடிகை குஷ்புவை சிம்பு அணுகியதாக கூறப்படுகிறது

  ஏனென்றால் விஷாலும் – குஷ்புவும் நெருங்கிய நண்பர்கள். விஷாலுக்காக நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் குஷ்பு ஆதரவு திரட்டினார். இதனால் குஷ்பு சொன்னால விஷால் கேட்பார் என்று சிம்பு நம்புகிறார். மேலும் சிம்புவும் கூட நடிகை குஷ்புவின் நெருங்கிய நண்பர் தான். எனவே ஒரு நண்பனுக்காக இன்னொரு நண்பனிடம் தூது செல்லுமாறு குஷ்புவிடம் சிம்பு உருகியதாக கூறப்படுகிறது.